Appa passes away

18 Apr

Appa passes away

Thursday, April 18, 2013, 6 PM

விஜய வருடம், சித்திரை மாதம் 5- ஆம் தேதி, வியாழக் கிழமை மாலை 6மணி

Chengalpattu, Tamil Nadu, India

தாயுமானம் என்றும் AST என்றும் அன்புடன் அழைக்கப்பட்ட தாயுமானசுவாமி பிள்ளை, டிசம்பர் மாதம், புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1926-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: அட்சய வருடம், கார்த்திகை மாதம் 23-ஆம் தேதி, உத்திராடம் நட்சத்திரம், சதுர்த்தி) திரு அப்பாகுட்டி சோமசுந்தரம் பிள்ளைக்கும் திருமதி தில்லைக் கண்ணு அம்மாளுக்கும். மூன்றாவது குழந்தையாக (முதல் மகனாக) திருமறைக் காடு எனும் வேதாரண்யம் ஊரில், சென்னை மாநிலத்தில் (British Raj’s Madras Presidency), இந்தியாவில் பிறந்தார். அவர்களுடன் பிறந்தவர் 3-பேர். தாயுமானம் வேதாரண்யத்தில் 2 அக்காகளுடனும் 1- தங்கையுடனும் வளர்ந்தார். அவர் தகப்பனார் ஒரு உப்பு வியாபாரி, புகையிலை மற்றும் அரிசி சாகுபடி செய்பவர். சைவ நெரியைச் சார்ந்த தாயுமானவர் (1705-1742; Poet Saint Thayumanvar) வழி வந்தவர்.

AST வேதாரண்யத்தில் நடுப் பள்ளி வரை முடித்துவிட்டு நன்னிலம் மேற் பள்ளிக்கு (Nannilam High School) சென்றார். மேற் பள்ளி படிப்பு முடிந்ததும் வேதாரண்யம் வந்து தன் தந்தையாரின் பூர்விக தொழிலான உப்பு வியாபாரத்தையும் புகையிலை வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டார். தன்னுடைய சித்தாப்பாவான சர்தார் வேதரத்தினம் பிள்ளை (உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தியாகி; MLA) அவர்களுடனும் உப்புத் தொழில் கற்றுக் கொண்டார்.

திங்கள் கிழமை, மே மாதம் 19-ஆம் தேதி, 1952-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: நந்தன வருடம், வைகாசி மாதம் 6-ஆம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரம், கிருஷ்ண பட்சம், ஏகாதிசி திதியில்) வேளுகுடி திரு குப்புசாமி பிள்ளை மற்றும் இராமாமிர்தம் அம்மாளின் மூன்றாவது மகளான பட்டம்மாள் எனும் பட்டுவை வேதாரண்யத்தில் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் 1954-ல் சொர்ணாம் பாள் எனும் மகளும் 1959-ல் சோமசுந்தரம் எனும் மகனும் பிறந்தார்கள். பட்டம்மாள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், மாமியார் தில்லைக் கண்ணு ஆச்சிக்கு மருமகளாவும், சோமசுந்தரம் பிள்ளைக்கும் பிடித்த மருமகளாவும் வாழ்ந்தார்.

1956-ஆம் ஆண்டு மே மாதம் வெள்ளிக் கிழமை 25-ஆம் தேதி தகப்பனாரின் இறப்புக்குப் பிறகு தாயுமானம் குடும்ப வியாபாரத்தை முழுமுதலாக நடத்த ஆரம்பித்தார். தன்னுடைய தளராத உடல் பிரயாசையாலும் பணத்தாலும் பல முயற்சிகள் செய்தும் மனைவியின் இருதய நொய்க்கு மருந்தோ அறுவை சிக்ச்சையோ தஞ்சாவூரிலோ, சென்னையிலோ இல்லாதலால், 1965-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விசுவாசுவ வருடம், சித்திரை மாதம் 14-ஆம் தேதி, அவிட்டம் நட்சத்திரம், கிருஷ்ண பட்சம், தசமி திதியில்) முதல் மனைவியான பட்டம்மாளை இழந்தார்.

புதன் கிழமை, செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி, 1965-ஆம் வருடத்தில் (தமிழ் நாள்காட்டி: விசுவாசுவ வருடம், ஆவணி மாதம் 24-ஆம் தேதி, திருவோணம் நட்சத்திரம், சுக்ல பட்சம், தரையோதசி திதியில்) திருப்பயத்தங்குடி திரு தி.எஸ். வேதநாயகம் பிள்ளை மற்றும் சீதா லட்சுமிஅம்மாளின் மூன்றாவது குழந்தையான இராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தியாகராஜன், 1968-ல் தில்லைக்கரசி, 1976-ல் அம்பிகா என்னும் மூன்று குழந்தைகளுக்கும் தாயானார்.

தாயுமானசுமாமி பிள்ளை (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம் ,சித்திரை 5-ஆம் தேதி வியாழக் கிழமை, புனர்பூசம் நட்சத்திரம், சுக்ல பட்சம், அஸ்டமி திதி), ஏப்ரல் மாதம் 18–ஆம் தேதி மாலை 6:00 மணியளவில் மகன், மகள்கள், மாப்பிள்ளை, அக்கா மகன் அருகே இருக்க இறைவனடி சேர்ந்தார். மறுநாள் ஏப்ரல் மாதம், வெள்ளிக் கிழமை, 19-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம், சித்திரை மாதம் 6-ஆம் தேதி), மாலை 6:00 மணியளவில் வேதாரண்யத்தில் சைவ வேளாள முறைப்படி சைவ வேளாள மயான இடத்தில் தகனம் செய்யப் பட்டார். மறுநாள் ஏப்ரல் மாதம், சனிக் கிழமை, 20-ஆம் தேதி (தமிழ் நாள்காட்டி: விஜய வருடம், சித்திரை மாதம் 7-ஆம் தேதி), காலை 7:00 மணியளவில் அன்னாரின் சாம்பல் வங்கள் விரிகுடாவில் கரைக்கப் பட்டது. வேதாரண்யம் வேத அமிர்த ஏரியின் கரையில் குளியல் முடிந்தது.

விஜய வருடம் சித்திரை 14-ஆம் தேதியில் (ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 27-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பாஷாணஸ்தாபனம் (10-ஆவது நாள், tenth day ceremony after death) செய்யப் பட்டது (மனைவியுடன்). சித்திரை 15-ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை ஏப்ரல் மாதம், 28-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரை (11-ஆவது நாள், eleventh day ceremony after death) வேதாரண்யம், நாகை ரஸ்தா, வேதாமிர்தம் ஏரி கிழ்படிதுறையில் தஸாஸ்த்து செய்யப் பட்டது (மனைவியுடன்). பின்னர் 44/1 வடக்கு வீதி பூர்விக வீட்டில் தானமும் கிரேக்கியமும் செய்யப் பட்டது (மனைவியுடன்). மாலை 6:00 மணிக்கு பிறகு (இராகு காலம் முடியவும்) வேதாரண்யம் வீணவாத விதுஷிணி சமேத திருமறைக்காடார் கோவிலில் (Vedaraniam; Vedaranyam; Thirumarai Kadu; Vedharanyeswarer) வழி பாடு நடை பெற்றது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: