Amma passes away

14 Apr

Amma Passes away

Tamil New Year Morning

Sunday, April 14, 2013, 9 AM

விஜய வருடம், சித்திரை மாதம் 1- ஆம் தேதி, ஞாயிற்று கிழமை காலை 9 மணி

Chengalpattu, Tamil Nadu, India

பூமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட இராஜலட்சுமி, ஜனவரி மாதம்,  புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1941-ஆம் வருடத்தில் திரு தி.எஸ். வேதநாயகம் பிள்ளைக்கும் சீதா லட்சுமிஅம்மாளுக்கும் மூன்றாவது குழந்தையாக திருப்பயத்தங்குடி, சென்னை மாகாணம், இந்தியாவில் பிறந்தார். அவர்களுடன் பிறந்தவர் 9-பேர். பூமா திருப்பயத்தங்குடி கிராமத்தில் வளர்ந்தார். அவர் தகப்பனார் ஒரு விவசாயி, அவர் தாயார் குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தார்கள்.

புதன் கிழமை, 8-ஆம் தேதி, 1965-ஆம் வருடத்தில் இராஜலட்சுமி, திருமறைக் காடு எனும் வேதாரண்யத்தை சேர்ந்த அப்பாகுட்டி தங்கம்மாளின் பேரனும் சோமசுந்தரம் பிள்ளை தில்லைக் கண்ணு ஆச்சியின் மகனான தாயுமானசுவாமி பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். வேதாரண்யத்தில் பூமா சொர்ணாம் பாள் மற்றும் சோமசுந்தரம் எனும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். மாமியார் தில்லைக் கண்ணு ஆச்சியின் கடைசி நாள் வரை அவரையும் கவனித்துக் கொண்டார்.

1966-ல் தியாகராஜன், 1968-ல் தில்லைக்கரசி, 1976-ல் அம்பிகா என்னும் மூன்று குழந்தைகளுக்கும் தாயானார். பூமாவின் சமையல் மிக பிரசத்தி பெற்றது. இராஜலட்சுமி இறைவனை தினமும் பூஜைனை செய்வார்கள். தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொண்டும், சந்தனம் மற்றும் ஊதுபத்தி கொண்டும் தினசரி வழிபாடு செய்வார்கள்.

இராஜலட்சுமி விஜய வருடப் பிறப்பன்று (சித்திரை 1-ஆம் தேதி), ஏப்ரல் மாதம், ஞாயிற்று கிழமை, 14-ஆம் தேதி காலை 9:00 மணியளவில் மகன் தியாகராஜன் மடியிலிருந்து இறைவனடி சேர்ந்தார். மறுநாள் ஏப்ரல் மாதம், திங்கள் கிழமை, 15-ஆம் தேதி (விஜய வருடம், சித்திரை மாதம் 2-ஆம் தேதி), நடுப்பகல் 12:00 மணியளவில் வேதாரண்யத்தில் சைவ வேளாள முறைப்படி சைவ வேளாள மயான இடத்தில் தகனம் செய்யப் பட்டார். மறுநாள் ஏப்ரல் மாதம், செவ்வாய் கிழமை, 16-ஆம் தேதி (விஜய வருடம், சித்திரை மாதம் 3-ஆம் தேதி), காலை 7:00 மணியளவில் அன்னாரின் சாம்பல் வங்காள விரிகுடாவில் கரைக்கப் பட்டது. வேதாரண்யம் வேத அமிர்த ஏரியின் கரையில் குளியல் முடிந்தது.

விஜய வருடம் சித்திரை 14-ஆம் தேதியில் (ஏப்ரல் மாதம், சனிக்கிழமை, 27-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து இரவு 8:00 மணி வரை பாஷாணஸ்தாபனம் (10-ஆவது நாள், tenth day ceremony after death) செய்யப் பட்டது (கணவருடன்). சித்திரை 15-ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை ஏப்ரல் மாதம், , 28-ஆம் நாள்) காலை 6:00 மணியிலிருந்து மதியம் 12:00 மணி வரை (11-ஆவது நாள், eleventh day ceremony after death) வேதாரண்யம், நாகை ரஸ்தா, வேதாமிர்தம் ஏரி கிழ்படிதுறைய்ல் தஸாஸ்த்து செய்யப் பட்டது (கணவருடன்). பின்னர் 44/1 வடக்கு வீதி பூர்விக வீட்டில் தானமும் கிரேக்கியமும் செய்யப் பட்டது (கணவருடன்). மாலை 6:00 மணிக்கு பிறகு (இராகு காலம் முடியவும்) வேதாரண்யம் பெரிய கோவிலில் வழி பாடு நடை பெற்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: